புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   952
Zoom In NormalZoom Out

264 பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,
அணி மயிற் பீலி சூட்டி, பெயர் பொறித்து,
இனி நட்டனரே, கல்லும்; கன்றெடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது,
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?

திணையும் துறையும் அவை. (கரந்தை, கையறுநிலை)

உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

265 ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,
கல் ஆயினையே - கடுமான் தோன்றல்! -
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.

திணையும் துறையும் அவை. (கரந்தை, கையறுநிலை)

சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.

266 பயம் கெழு மா மழை பெய்யாது மாறி,
கயம் களி முளியும் கோடை ஆயினும்,
பழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல்,
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்?
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல,
வல்லே களைமதி அத்தை - உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! 

திணை: பாடாண் திணை; துறை: பரிசில் கடாநிலை.

சோழன் உருவப்பல்தேர் இளஞ் சேட் சென்னியைப் பெருங்குன்றூர்
கிழார் பாடியது.
 

267 (இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை.)

268 (இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை.) 

269 குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தைபொலியச் சூட்டி,
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர்
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தென,
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி;
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில்
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்,
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப,
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே. 

திணை: வெட்சி; துறை: உண்டாட்டு.

ஒளவையார் பாடியது.

270 பல் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமங்கண் கூடித்தாம் வேட்பவ்வே -
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே! பேரிற்பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும்