புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   953
Zoom In NormalZoom Out

270...
 
அரிக் குரற் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரு மறவர்
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை,
விழு நவி பாய்ந்த மரத்தின்,
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. 
 
திணை: கரந்தை; துறை: கையறு நிலை.
 
கழாத்தலையார் பாடியது.
 
271
 
நீர் அறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை,
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே,
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து,
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் -
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! 
 
திணை: நொச்சி; துறை: செருவிடை வீழ்தல்.
 
வெறிபாடிய காமக்கண்ணியார் பாடியது.
 
272
 
மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி!
போது விரி பல் மரனுள்ளும் சிறந்த
காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே!
கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குறும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. 
 
திணையும் துறையும் அவை. (நொச்சி, செருவிடை வீழ்தல்)
 
273
 
மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே -
இருபேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெரு மரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? 
 
திணை: தும்பை; துறை: குதிரை மறம்.
 
எருமை வெளியனார் பாடியது.
 
274
 
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை,
பீலிக் கண்ணிப் பெருந்