| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 955 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 278... | வாளொடு படு பிணம் பெயரா, செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய படு மகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! |
| திணையும் துறையும் அவை. (தும்பை, உவகைக் கலுழ்ச்சி) | |
| காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. | |
| 279 | கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே; மூதில் மகளிராதல் தகுமே: மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே; நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே; இன்றும், செருப்பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ, பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, ஒரு மகன் அல்லது இல்லோள், 'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே! |
| திணை: வாகை; துறை: மூதின் முல்லை. | |
| ஒக்கூர் மாசாத்தியார் பாடியது. | |
| 280 | என்னை மார்பில் புண்ணும் வெய்ய; நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா; துடிய! பாண! பாடு வல் விறலி! என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியற் சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் கழி கல மகளிர் போல, வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! |
| திணை: பொதுவியல்; துறை: ஆனந்தப்பையுள். | |
| மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. | |
| 281 | தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க, கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ, காக்கம் வம்மோ - காதல் அம் தோழி! - வேந்துறு விழுமம் தாங்கிய பூம் பொறிக் கழற் கால் நெடுந்தகை புண்ணே. |