புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   956
Zoom In NormalZoom Out

திணை: காஞ்சி; துறை: பேய்க்காஞ்சி. 

அரிசில் கிழார் பாடியது.
 

282
 
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின்,
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை,
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின்,
.............................................................................................
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அருங் கடன் இறுமார் வயவர் ஏறிய,
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே;
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத்
.......................................................................................
அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது, களத்து ஒழியாதே
சேண் விளங்கு நல் இசை நிறீஇ,
நா நவில் புலவர் வாய் உளானே.
 
 

திணை ................... 

பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.
 

283
 
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,
வாளை நீர் நாய் நாள் இரை பெறூஉப்
பௌவ உறை அளவா,
..................................................................... வி மயக்கி,
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம் புரி கோசர் அவைக் களத்தாலும்,
மன்றுள் என்பது கெட...
...........................................ானே பாங்கற்கு
ஆர் சூழ்குறட்டின் வேல் நிறத்து இங்க,
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர,
தெற்றிப் பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் நன்று புரப்ப,
.....................................................ண்ட பாசிலைக்
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே.
 
 

திணை: தும்பை; துறை: பாண்பாட்டு. 

அடை நெடுங்கல்வியார் பாடியது.
 

284
 
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,
வேந்து விடு விழுத் தூது ஆங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடி, காலின்,
தமியன் வந்த மூதிலாளன்
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய் வாள் திருத்தா,
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே.
 
 

திணையும் துறையும் அவை. (தும்பை, பாண்பாட்டு) 

ஓரம்போகியார் பாடியது.
 

285
 
பாசறையீரே! பாசறையீரே!
துடியன் கையது வேலே; அடி புணர்
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
கடுந் தெற்று