| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 958 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 289 | ஈரச் செவ்வி உதவின ஆயினும், பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, வீறு வீறு ஆயும் உழவன் போல, பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும், காதலின் தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, 'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே; கேட்டியோ வாழி - பாண! பாசறை, 'பூக்கோள் இன்று' என்று அறையும் மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? |
| திணை: .............; துறை: ................முல்லை.
கழாத்தலையார் பாடியது. | |
| 290 | இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப்போர் இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்! நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே; மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், உறைப்புழி ஓலை போல, மறைக்குவன் - பெரும! நிற்குறித்து வரு வேலே. |
| திணை: கரந்தை; துறை: குடி நிலை உரைத்தல்.
ஒளவையார் பாடியது. | |
| 291 | சிறாஅ அர்! துடியர்! பாடு வல் மகாஅ அர்! தூ வெள் அறுவை மாயோற் குறுகி, இரும் புட் பூசல் ஓம்புமின்; யானும், விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்; என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே - கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே! |
| திணை அது; துறை: வேத்தியல். (கரந்தை) | |
| நெடுங்கழுத்துப் பரணர் பாடியது. | |
| 292 | வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி, 'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று, சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்! ஈண்டே போல வேண்டுவன் ஆயின், என் முறை வருக என்னான், கம்மென எழு தரு பெரும் படை விலக்கி, ஆண்டும் நிற்கும் ஆண் தகையன்னே. |
| திணை: வஞ்சி; துறை: பெருஞ்சோற்றுநிலை.
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது. | |
| 293 | நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு |