புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   959
Zoom In NormalZoom Out

293...
 
எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப்
பிறர் மனை புகுவள் கொல்லோ -
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
 

திணை: காஞ்சி; துறை: பூக்கோட் காஞ்சி.

நொச்சி நியமங் கிழார் பாடியது.
 

294
 
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர,
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை,
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து,
இறையும் பெயரும் தோற்றி, நுமருள்
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார் -
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே.
 

திணை: தும்பை; துறை: தானை மறம்.

பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 

295
 
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி,
கிடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன -
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.sde
 

திணை அது; துறை: உவகைக் கலுழ்ச்சி. (தும்பை)

ஒளவையார் பாடியது.
 

296
 
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென்றவ்வே;
வேந்து உடன்று எறிவான்கொல்லோ -
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே
 

திணை வாகை; துறை: ஏறாண் முல்லை.

வெள்ளைமாளர் பாடியது.
 

297
 
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை,
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி,
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே - வைந் நுதி
நெடு வேல் பாய்ந்த மார்பின்,