புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   960
Zoom In NormalZoom Out

297...
 
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. 
 
திணை: வெட்சி; துறை: உண்டாட்டு. 

...........................................................................
 

298
 
எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணு - மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே, இனியே
நேரார் ஆர் எயில் முற்றி,
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே. 
 
திணை: கரந்தை; துறை: நெடுமொழி. 

ஆலியார் பாடியது.
 

299
 
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்ததர் உண்ட ஓய் நடைப் புரவி,
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ
நெய்ம்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,
தண்டை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. 
 
திணை: நொச்சி; துறை: குதிரை மறம். 

பொன்முடியார் பாடியது.
 

300
 
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு
துறுதல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி,
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே. 
 
திணை: தும்பை; துறை: தானை மறம். 

அரிசில் கிழார் பாடியது.
 

301
 
பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல் சான்றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்;
எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர்யார் அவன் கண்ணிய பொருளே?
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக்காண்
நிலன் அளப்பன்ன நில்லாக் குறுநெறி,