| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 961 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
301... | வண்பரிப் புரவிப் பண்பு பாராட்டி, எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென வேந்துஊர் யானைக்கு அல்லது, ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே. |
|
திணையும் துறையும் அவை. (தும்பை, தானைமறம்) | |
|
ஆவூர் மூலங்கிழார் பாடியது. | |
| | |
| 302 | வெடிவேய் கொள்வது போல ஓடி, தாவுபு உகளும், மாவே; பூவே, விளங்குஇழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணிவணர் கோட்டுச் சீறியாழ்க் கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்இவர் விசும்பின் மீனும், தண்பெயல் உறையும், உறை ஆற்றாவே. |
|
திணை அது; துறை: குதிரை மறம். (தும்பை) | |
|
வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது. | |
| | |
| 303 | நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே - நெருநை, உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர், கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் கயந்தலை மடப்பிடி புலம்ப, இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. |
|
திணையும் துறையும் அவை. (தும்பை, குதிரைமறம்) | |
|
எருமை வெளியனார் பாடியது. | |
| | |
| 304 | கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி, நடுங்கு பனிக் களைஇயர் நார்அரி பருகி, வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, எம்முற் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான் கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு, வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் இலங்கு இரும் பாசறை நடுங்கின்று - 'இரண்டு |