புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   962
Zoom In NormalZoom Out

304...
 
ஆகாது அவன் கூறியது' எனவே.
 

திணையும் துறையும் அவை. (தும்பை, குதிரைமறம்)

அரிசில்கிழார் பாடியது.
 

305
 
வயலைக் கொடியின் வாடிய மருங்குல்,
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான்
எல்லிவந்து நில்லாது புக்கு,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணி களைந்தனவே.
 

திணை வாகை; துறை: பார்ப்பன வாகை.

மதுரை வேளாசான் பாடியது.
 

306
 
களிறுபொரக் கலங்கு, கழல் முள் வேலி,
அரிதுஉண் கூவல், அம்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒள்நுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும்
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு
நாடு தரு விழுப்பகை எய்துக எனவே.
 

திணை அது; துறை: மூதில் முல்லை. (வாகை)

அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
 

307
 
ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரிஅணில் வாலத்து அன்ன,
கானஊகின் கழன்று உகு முதுவீ
அரியல் வான்குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்ப, தெறுவர்
பேர்உயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு
வெஞ்சின யானை வேந்தனும், 'இக்களத்து,
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என,
பண்கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சுஅற வீழ்ந்த புரைமையோனே.
 

திணை தும்பை; துறை களிற்றுடனிலை.

வண்ணக்கண் சோருமருங்குமரனார்.
 

308
 
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்து முகத்ததுவே;
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்துஆர் அகலம் உளம்