புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   963
Zoom In NormalZoom Out

308...
 
கழிந்தன்றே;
உளம்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாண,
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.
 

திணை: வாகை; துறை: மூதில் முல்லை.
 

கோவூர்கிழார் பாடியது.
 

309
 
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல் அரா உறையும் புற்றம் போலவும்,
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்று அருந்துப்பின் மாற்றோர், 'பாசறை
உளன்' என வெரூஉம் ஓர்ஒளி
வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதுவே.
 

திணை: தும்பை; துறை: நூழிலாட்டு.
 

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.
 

310
 
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறம் கொண்ட களிறுஅட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு -
மான் உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல் அணலோனே.
 

திணையும் துறையும் அவை. (தும்பை, நூழிலாட்டு).
 

பொன் முடியார் பாடியது.
 

311
 
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை,
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து;
சிறப்புடைச் செங்கண் புகைய, ஓர்
தோல்கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே.
 

திணை அது; துறை: பாண்பாட்டு. (தும்பை)
 

ஒளவையார் பாடியது.
 

312
 
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளை