புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   964
Zoom In NormalZoom Out

312...
 
க்குக் கடனே. 
 
திணை: வாகை; துறை: மூதின் முல்லை.
 
பொன்முடியார் பாடியது.
 
313
 
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;
உப்புஒய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. 
 
திணை: அது; துறை: வல்லாண் முல்லை. (தும்பை)
 
மாங்குடி கிழார் பாடியது.
 
314
 
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்
முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து
நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே - தன் இறை விழுமுறினே. 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
 
ஐயூர் முடவனார் பாடியது.
 
315
 
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி -
இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போல,
தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங்காலே. 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
 
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 
316
 
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும் புடைப் பழவாள் வைத்தனன்; இன்று இக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவதிலாளன் என்னாது, நீயும்,
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணிய,
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க,
சென்று வாய் சிவந்துமேல் வருக -
சிறுகண் யானை வேந்து விழுமு