புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   965
Zoom In NormalZoom Out

317... றவே. 

திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண் முல்லை) 

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது. 

317  வென்வேல் ................................. நது
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும்,
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப ...................
..................கும், எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே. 

திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை) 

வேம்பற்றூர்க் குமரனார் பாடியது. 

318  கொய் அடகு வாட, தருவிறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே -
மனைஉறை குரீஇக் கறை அணல் சேவல்,
பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பை,
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் - வேந்து விழுமுறினே. 

திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை) 

பெருங் குன்றூர் கிழார் பாடியது. 

319  பூவற் படுவில் கூவல் தோண்டிய
செங்கண் சில்நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;
படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான்,
முயல்சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்கு இருந்தீமோ, முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புன்தலைச் சிறாஅர் கன்றுஎனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து, நின்
பாடினி மாலை அணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. 

திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை) 

ஆலங்குடி வங்கனார் பாடியது. 

320 முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்