|
322... வேலோன் ஊரே.
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
ஆவூர் கிழார் பாடியது.
323 புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் சினம்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... கு உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, வெள்வேல் ஆவம்ஆயின், ஒள்வாள் கறையடி யானைக்கு அல்லது உறைகழிப்பு அறியா வேலோன் ஊரே.
திணை: தும்பை; துறை: வல்லாண்முல்லை
................டார் கிழார் பாடியது.
324 வெருக்குவிடை அன்ன வெருள்நோக்குக் கயந்தலை, புள்ஊன் தின்ற புலவுநாறு கயவாய், வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை உடையின் சுரையுடை வால்முள் ஊக நுண்கோல் செறித்த அம்பின், வலாஅர் வல்வில் குலாவரக் கோலி, பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர், குமிழ் உண் வெள்ளை பகுவாய் பெயர்த்த வெண்காழ் தாய வண் காற் பந்தர், இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து, பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தர்க்கு உலந்துழி உலக்கும் நெஞ்சுஅறி துணையே.
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
ஆலத்தூர் கிழார் பாடியது.
325 களிறு நீறு ஆடிய விடுநில மருங்கின், வம்பப் பெரும்பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, குழிகொள் சில்நீர் குராஅல் உண்டலின், சேறு கிளைத்திட்ட கலுழ்கண் ஊறல் முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் - ஆடவர் உடும்புஇழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந்தலைச் சிறாஅர் கணை விளையாடும் அருமிளை இருக்கையதுவே - வென்வேல் வேந்துதலை வரினும் தாங்கும், தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
326 ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை
|