புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   968
Zoom In NormalZoom Out

326...
 
வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலாவிட்டு அரற்ற,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து,
கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கையதுவே மனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேண்புலம் படராது,
படப்பைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் விதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்,
அருஞ்சமம் ததையத் தாக்கி, பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும் பரிசிலனே. 
 
திணை: வாகை; துறை: மூதின் முல்லை.
 
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
 
327
 
எருதுகால் உறாஅது இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறுபுல்லாளர் முகத்து அவை கூறி,
வரகுகடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லாளன்னே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை)
 
..............................................................
 
328
 
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல் விளையாதே;
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
................. டு அமைந்தனனே;
அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட....
களவுப் புளி அன்ன விளை....
..............வாடுஊன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு,
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு இனிது இருந்த பின்
... ... ... ... .... ... தருகுவன் மாதோ -
தாளிமுதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை)
 
பங்கு ............................. பாடியது.
 
329
 
இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி,
நல்நீராட்டி, நெய்ந்நறைக்