| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 970 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
333 | நீருள் பட்ட மாரிப் பேர்உறை மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண, கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல் உள்ஊர்க் குறும்புதல் துள்ளுவன உகளும் தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், 'உண்க' என உணரா உயவிற்று ஆயினும், தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்; சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென, குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின், குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து, சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர் வேட்டக் குடிதொறும் கூட்டு .............................................. உடும்புசெய் பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா, வம்புஅணி யானை வேந்து தலைவரினும், உண்பது மன்னும் அதுவே; பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே. |
|
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) | |
|
................................................................. | |
| 334 | காமரு பழனக் கண்பின் அன்ன தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல், புன்தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு ....... . ...................... ன் ஊரே மனையோள் பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், ஊண்ஒலி அரவமொடு கைதூவாளே; உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த பொலம் .............................. ப் பரிசில் பரிசிலர்க்கு ஈய, உரவுவேல் காளையும் கைதூவானே. |
|
| |
|
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) | |
|
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது. | |
| | |
| 335 | அடல் அருந் துப்பின்.................... ...................குருந்தே முல்லை என்று இந்நான்கு அல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு, இந்நான்கு அல்லது உணாவும் இல்லை; துடியன், பாணன், |