| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 971 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
335... | பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்நின்று விலங்கி, ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்ததென, கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) | |
|
மாங்குடி கிழார் பாடியது. | |
| | |
| 336 | வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே; கடவன கழிப்பு இவள் தந்தையுஞ் செய்யான்; ஒளிறு முகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த ஒளிறுவேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; இயவரும் அறியாப் பல்இயம் கறங்க, அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங்கடி மூதூர்; அறன் இலள் மன்ற தானே - விறல் மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் தகை வளர்த்து எடுத்த நகையொடு பகை வளர்த்திருந்த இப்பண்பு இல் தாயே. |
|
திணை: காஞ்சி; துறை: மகட்பாற் காஞ்சி. | |
|
பரணர் பாடியது. | |
|
| |
|
337 | ஆர்கலியினனே, சோணாட்டு அண்ணல், கவிகை மண் ஆள் செல்வர் ஆயினும், வள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், வரல்தோறு அகம் மலர, .... ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக்கைப் பாரி பறம்பின் பனிச்சுனை போல, காண்டற்கு அரியன் ஆகி, மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கி, தண்ணென அகில்ஆர் நறும்புகை ஐதுசென்று அடங்கிய கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு, மனைச் செறிந்தனளே, வாணுதல் இனியே, அற்றன்று ஆகலின், தெற்றெனப் போற்றி, காய் நெல் கவளம் தீற்றி, காவு தொறும் கடுங்கண் யானை காப்பனர் அன்றி, வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் பொருசமம் கடந்த உருகெழு நெடுவேற் குருதி பற்றிய வெருவரு தலையர்; மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென யார் ஆகு |