| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 972 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
337... | வர்கொல் தாமே நேரிழை உருத்த பலசுணங்கு அணிந்த மருப்புஇள வனமுலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
கபிலர் பாடியது. | |
| | |
| 338 | ஏர் பரந்த வயல், நீர்பரந்த செறுவின், நெல் மலிந்த மனை, பொன்மலிந்த மறுகின், படுவண்டு ஆர்க்கும் பல்மலர்க் காவின், நெடுவேள் ஆதன் போந்தை அன்ன, பெருஞ்சீர் அருங் கொண்டியளே; கருஞ்சினை வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், கொற்ற வேந்தர் வரினும், தன்தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் - வண் தோட்டுப் பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று உணங்கு கலன் ஆழியின் தோன்றும் ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
குன்றூர் கிழார் மகனார் பாடியது. | |
| | |
| 339 | வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு மடலை மாண்நிழல் அசைவிட, கோவலர் வீததை முல்லைப் பூப்பறிக்குந்து; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; தொடலை அல்குல் தொடிந்தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தல் பூக்குறூஉந்து; பைந்தழை துயல்வரும் செறு விறற.............. ............................................................................லத்தி வளர வேண்டும் அவளே, என்றும் - ஆர்அமர் உழப்பதும் அமரியளாகி, முறம்செவி யானை வேந்தர் மறம்கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
.............................................................. | |
| 340 | அணித்த தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக் குரல்அம் குன்றி கொள்ளும் இளையோள், மாமகள் ....................... ல்என வினவுதி, கேள், நீ: எடுப்பவெ...,.................................................. ..........................மைந்தர் தந்தை இரும்பனை அன்ன பெருங்கை யானை |