புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   973
Zoom In NormalZoom Out

340...
 
கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
அ............................... பாடியது.
 
 
 
341
 
வேந்துகுறை யுறவும் கொடாஅன், ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
..........................................................................................................
புலிக்கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
'பூக்கோள்' என ஏஎய், கயம் புக்கனனே;
விளங்கு இழைப் பொலிந்த வேளா மெல்இயல்,
சுணங்கு அணி வனமுலை, அவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ -
ஆர்அமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,
நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று - எனப்
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக்
களிறு பொரக் கலங்கிய தண்கயம் போல,
பெருங்கவின் இழப்பது கொல்லோ,
மென் புனல் வைப்பின் இத்தண் பணை ஊரே!
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
பரணர் பாடியது.
 
 
 
342
 
கானக் காக்கை கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணி, பெருந்தோட் குறுமகள்,
ஏனோர் மகள் கொல் இவள்? என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை!
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே;
பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்,
தண்பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்,
கழிபிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா,
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சியவர், இவள் தன்னைமாரே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
அரிசில் கிழார் பாடியது.