| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 974 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 343 | 'மீன் நொடுத்து நெல் குவைஇ, மிசை அம்பியின் மனை மறுக்குந்து, மனைக் குவைஇய கறி மூடையால், கலிச் சும்மைய கரை கலக்குறுந்து; கலம் தந்த பொற் பரிசம் கழித் தோணியான், கரை சேர்க்குந்து; மலைத் தாரமும் கடல் தாரமும் தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் புனல்அம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்குகடல் முழவின் முசிறி அன்ன, நலம்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும், புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத் தந்தையும் கொடாஅன் ஆயின் - வந்தோர், வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று கொல்லோ தானே - பருந்து உயிர்த்து இடைமதில் சேக்கும் புரிசை, படைமயங்கு ஆரிடை, நெடுநல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
பரணர் பாடியது. | |
| | |
| 344 | செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு, நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ - இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, காஞ்சிப் பனிமுறி ஆரங்கண்ணி. . . . . கணி மேவந்தவள் அல்குல் அவ்வரியே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
. . . .அடை நெடுங் கல்வியார் பாடியது. | |
| | |
| 345 | களிறு அணைப்பக் கலங்கின், காஅ, தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு; மா மறுகலின் மயக்குற்றன, வழி; கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; தெறல் மறவர் இறை கூர்தலின், பொறை மலிந்து நிலன் நெளிய, வந்தோர் பலரே, வம்ப வேந்தர், பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின் ஓவு உறழ் இரும்புறம் காவல் கண்ணி, கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, மையல் நோக்கின், தையலை நயந்தோர் அளியர் தாமே; இவள் தன்னைமாரே செல்வம் வேண்டார், செருப்புகல் |