புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   975
Zoom In NormalZoom Out

345... வேண்டி,
நிரல் அல்லோர்க்குத் தரலோ இல் என;
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர், கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ!
என் ஆவதுகொல் தானே -
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!  

திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) 

அவனை அவர் பாடியது. (அடைநெடுங் கல்வியார் பாடியது.)   

346 பிற ..................... ள பால்என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல்ஆண் சிறாஅன்;
ஒல்வேன் அல்லன், அதுவாய் ஆகுதல் -
அழிந்தோர் ஒழிய ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும், இவள் நலனே.  

திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற்காஞ்சி) 

அண்டர் மகன் குறுவழுதி பாடியது.  

347 உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பல்தேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்த பைந்தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்,
மணம்நாறு மார்பின், மறப்போர் அகுதை,
குண்டுநீர் வரைப்பின், கூடல்அன்ன
கவைஇருங் கூந்தல் வருமுலை சேப்ப,
...........................................................................................................
என் ஆவது கொல் தானே...................................
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப,
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே.
  

திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) 

கபிலர் பாடியது. 

  

348 

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
கண்மடல் கொண்ட தீம்தேன் இரிய,
கள் அரிக்கும் குயம், சிறுசில்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளை, தாயே
ஈனானாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின் தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தலமன் - எம் பெருந்துறை மரனே!
  

திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) 

பரணர் பாடியது. 

  

349 

நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையா,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,