புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   976
Zoom In NormalZoom Out

349...
 
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம்: ஆயின், வைஎயிற்று,
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை,
மரம்படு சிறுதீப் போல,
அணங்கு ஆயின், தான் பிறந்த ஊர்க்கே. 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
 
350
 
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர்
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது?
படுமழை உருமின் இரங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலைவந்து, எம்
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமைகுவர் அல்லர் - போர்உழந்து,
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்,
தொடிபிறழ் முன்கை, இளையோள்
அணிநல் ஆகத்து அரும்பிய சுணங்கே. 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.
 
351
 
படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்,
கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,
படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லென,
கடல்கண்டு அன்ன கண்அகன் தானை
வென்றுஎறி முரசின் வேந்தர், என்றும்,
வண்கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என்ஆ வது கொல் தானே - தெண்நீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் ஊரே? 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
 
352
 
தேஎம் கொண்ட வெண்மண்டையான்;
வீ...................................................................கறக்குந்து;
அவல்வகுத்த பசுங்குடையான்,
புதல்முல்லைப் பூப்பறிக்குந்து;
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
குன்றுஏறிப் புனல்பாயின்,
புறவாயால் புனல்வள
............................................................ தொடைநறவின்
மாவண் தித்தன்