புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   977
Zoom In NormalZoom Out

353...
 
வெண்நெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
கொடுப்பவும் கொளாஅனெ ......
.................ர்தந்த நாகுஇள வேங்கையின்,
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
சிறுகோல் உளையும் புரவிெ..................
............................... யமரே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
பரணர் பாடியது.
 
 
 
353
 
ஆசுஇல் கம்மியன் மாசுஅறப் புனைந்த
பொலம்செய் பல்காசு அணிந்த அல்குல்,
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ,
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி,
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை
வினவல் ஆனா வெல்போர் அண்ணல்!
'யார்மகள்?' என்போய்; கூறக் கேள், இனி:
குன்றுகண்டு அன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
.........................................................................................................
............................................. உழக்கிக் குருதி ஓட்டி,
கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு,
பஞ்சியும் களையாப் புண்ணர்,
அஞ்சுதகவு உடையர்இவள் தன்னை மாரே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
 
 
 
354
 
அரைசுதலை வரினும் அடங்கல் ஆனான்
நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தென தந்தையும் பெயர்க்கும்;
வயல்அமர் கழனி வாயில் பொய்கை,
கயல்ஆர் நாரை உகைத்த வாளை
புனல்ஆடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ -
சுணங்குஅணிந்து எழிலிய அணந்து ஏந்து இளமுலை,
வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை
மான்பிணை அன்ன மகிழ்மட நோக்கே
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
பரணர் பாடியது.