| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 978 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 355 | மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்; ஊரது நிலைமையும் இதுவே: ............................................................................. ...................................................................... ...................................................................... |
| 356 | களரி பரந்து, கள்ளி போகி, பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு; நெஞ்சுஅமர் காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்நீறு அவிப்ப, எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து மன்பதைக்கு எல்லாம் தானாய், தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, காடுவாழ்த்து) | |
|
தாயங்கண்ணனார் பாடியது. |