புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   980
Zoom In NormalZoom Out

358... விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.
திணை: அது; துறை: மனையறம், துறவறம். (காஞ்சி)
வான்மீகியார் பாடியது. 

359 பாறுபடப் பறைந்த பல்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு,
பிணம் தின் குறுநரி நிணம்திகழ் பல்ல,
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி,
விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
களரி மருங்கின் கால்பெயர்த்து ஆடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு முன்னினரே, நாடு கொண் டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;
அதனால், வசைநீக்கி இசை வேண்டியும்,
நசைவேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பலகளிற்றொடு,
பொலம்படைய மாமயங்கிட,
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது,
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென,
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டு நீடு விளங்கும்நீ எய்திய புகழே.  

திணை அது; துறை: பெருங்காஞ்சி. (காஞ்சி) 

அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது. 

360  பெரிது ஆராச் சிறுசினத்தர்,
சில சொல்லான் பலகேள்வியர்,
நுண்உணர்வினால் பெரும் கொடையர்,
கலுழ்நனையான் தண்தேறலர்,
கனிகுய்யான் கொழுந்துவையர்,
தாழ் உவந்து தழூஉமொழியர்,
பயன்உறுப்பப் பலர்க்கு ஆற்றி,
ஏமம் ஆக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள், இனி: நாளும்,
பலரே, தகையஃது அறியா தோரே;
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு
புல்லகத்து இட்டசில்அவிழ் வல்சி,
புலையன் ஏவ, புல்மேல்