புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   981
Zoom In NormalZoom Out

360...
 
அமர்ந்து உண்டு,
அழல்வாய்ப் புக்க பின்னும்,
பலர்வாய்த்து இராஅர், பருத்துஉண் டோரே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, பெருங்காஞ்சி)
 
தந்து மாறனைச் சங்க வருணர் என்னும் நாகரியர் பாடியது.
 
 
 
361
 
கார் எதிர் உருமின் உரறி, கல்லென,
ஆர்உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
அருங்கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈத்து,
தெருள்நடை மாகளிற் றொடுதன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள்நடை ........................ான்றதன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,
புரிமாலையர் பாடினிக்குப்
பொலந்தாமரைப் பூம்பாணரொடு
கலந்து அளைஇய நீள்இருக்கையால்
பொறையொ............ மான்நோக்கின்,
வில்என விலங்கிய புருவத்து, வல்லென
நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
............................................பொலங்கலத்து ஏந்தி,
அமிழ்து எனமடுப்ப மாந்தி, இகழ்விலன்,
நில்லா உலகத்து............... மைநீ
சொல்ல வேண்டா................. முந்தறிந்த
...................................................................................
...............................................னார் பாடியது.
 
 
362
 
ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த,
மதிஉறழ் ஆரம் மார்பில் புரள,
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்ப,
பொழிலகம் பரந்தபெ.................
.......................கும விசய வெண்கொடி
அணங்கு உருத்தன்ன கணம்கொள் தானை,
கூற்றத்து அன்ன மாற்றுஅரு முன்பின்,
ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
நான்மறைக் குறி .......................... யின்
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து, மயக்குஒரீஇ,
கைபெய்தநீர் கடற்பரப்ப,
ஆம்இருந்த அடைநல்கி,
சோறு