| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 982 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
362... | கொடுத்து மிகப்பெரிதும் வீறு சான......................... நன்றும் சிறுவெள் என்பின் நெடுவெண் களரின், வாய்வன் காக்கை கூகையொடு கூடிப் பகலும் கூவும் அகலுள் ஆங்கண், காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு, இல் என்று இல்வயின் பெயர, மெல்ல இடம்சிறிது ஒதுங்கல் அஞ்சி, உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
|
திணை: பொதுவியல்; துறை: பெருங்காஞ்சி. | |
|
சிறுவெண் தேரையார் பாடியது. | |
| | |
| 363 | இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவணது இடையிறர்க் கின்றி, தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக் காடுபதி ஆகப் போகி, தம்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே; அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே; கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்புஇலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, இழிபிறப்பினோன் ஈயப்பெற்று, நிலம்கலன் அக, இலங்குபசி மிசையும், இன்னா வைகல் வாரா முன்னே, செய்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுஉடன் துறந்தே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், பெருங்காஞ்சி) | |
|
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது. | |
| | |
| 364 | வாடா மாலை பாடினி அணிய, பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க, மைவிடை இரும் போத்துச் செந்தீச் சேர்த்தி, காயம் கனிந்த கண்அகன் கொழுங்குறை நறவு உண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப, உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்த்தும், மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே! அரிய ஆகலும் |