| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 983 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
364... | உரிய, பெரும! நிலம்பக வீழ்ந்து அலங்கற் பல்வேர் முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே. |
|
திணையும் துறையும் அவை. (பொதுவியல், பெருங்காஞ்சி) | |
|
. . . . அவனைக் கூகைக்கோழியார் பாடியது. (தந்துமாறனைக்) | |
| 365 | 'மயங்குஇருங் கருவிய விசும்பு முகன்ஆக, இயங்கிய இருசுடர் கண்என, பெயரிய வளிஇடை வழங்கா வழக்குஅரு நீத்தம், வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப் பொன்அம் திகிரி முன்சமத்து உருட்டி, பொருநர்க் காணாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவும் செல்லாது, இன்னும் விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற, உள்ளேன் வாழியர், யான்' எனப் பல்மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டுஎன உரைப்பரால், உணர்ந்திசி னோரே. |
|
திணை: காஞ்சி; துறை: பெருங்காஞ்சி. | |
|
மார்க்கண்டேயனார் பாடியது. | |
| | |
| 366 | விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம், ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித்து ஆக, அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப, ஒருதாம் ஆகிய பெருமை யோரும், தம்புகழ நிறீஇச் சென்று மாய்ந்தனரே; அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! .............................உரைப்பக் கேண்மதி; நின் ஊற்றம் பிறர்அறியாது, பிறர் கூறிய மொழிதெரியா, ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, இரவின் எல்லை வருவது நாடி, உரை.................................................... உழவுஒழி பெரும்பகடு அழிதின் றாங்கு, அசெங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ, அம்கள் தேறல் ஆய்கலத்து உகுப்ப, கெடல்அருந் திருவ! .................... மடைவேண்டுநர்க்கு இடைஅருகாது, அவிழ்வேண்டுநர்க்கு இடைஅருளி, விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப, நீர்நிலை பெருத்த வார்மணல் அடைகரை, காவு |