| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 984 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
366... | தொறும் . . . . . . . . . . மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, பெருங்காஞ்சி) | |
|
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது. | |
| | |
| 367 | நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா; வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நார்அரி தேறல் மாந்தி, மகிழ்சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத் ‘தீப்‘ புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்! யான்அறி அளவையோ இதுவே: வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்துஇயங்கு மாமழை உறையினும் உயர்ந்துமேந் தோன்றிப் பொலிக, நும் நாளே. |
|
திணை: பாடாண் திணை; துறை: வாழ்த்தியல். சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது. | |
| | |
| 368 | களிறு முகந்து பெயர்குவம் எனினே, ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போல, கைம்மா எல்லாம் கணைஇடத் தொலைந்தன; கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே; கடும்பரி நல்மான் வாங்குவயின் ஒல்கி, நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே; கொய்சுவற் புரவி முகக்குவம் எனினே; மெய்நிறைந்த வழுவொடு பெரும்பிறி தாகி, வளிவழக்கு அறுத்த வங்கம் போல, குருதிஅம் பெரும் |