| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 985 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
368... | புனல் கூர்ந்தனவே; ஆங்க, முகவை இன்மையின் உகவை இன்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து, ஆள்அழிப் படுத்த வாள்ஏர் உழவ! கடாஅ யானைக் கால்வழி அன்னஎன் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப ஒற்றி, பாடி வந்தது எல்லாம், கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்தநின் அரவுஉறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை: வாகை; துறை: மறக்களவழி. | |
|
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன்வேற் பல்தடக்கைப் பெருநற் கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருதுவீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர்போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது. | |
| | |
| 369 | இருப்பு முகஞ் செறித்த ஏந்துஎழில் மருப்பின், கருங்கை யானை கொண்மூ ஆக, நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள்மின் ஆக, வயங்குகடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசுமுழக்கு ஆக, அரசுஅராப் பனிக்கும் அணங்குஉறு பொழுதின், வெவ்விசைப் புரவி வீசுவளி ஆக, விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்அகன் கிடக்கை. ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக, விடியல் புக்கு, நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால், பிடித்துஎறி வெள்வேல் கணையமொடு வித்தி, விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ், பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, கணநரியோடு கழுதுகளம் படுப்ப, பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள! தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்தின் போர்வை அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றி, பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று எழிலி தோயும் இமிழ்இசை அருவி, பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத்து அன்ன ஓடை நுதல, ஒல்குதல் |