புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   986
Zoom In NormalZoom Out

369...
 
அறியா,
துடிஅடிக் குழவிய பிடி இடை மிடைந்த
வெழ முகவை நல்குமதி -
தாழா ஈகைத் தகைவெய் யோயே!
 
 
திணையும் துறையும் அவை; துறை: போர்க்கள உருவகமும் ஆம். (வாகை, மறக்களவழி)   சேரமான்   கடலோட்டிய வெல்கெழு
குட்டுவனைப் பரணர் பாடியது.
 
 
 
370
 
.............................................ளி
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப்
பசி தினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து,
அத்தக் குடிஞைத் துடிமருள் தீம்குரல்,
உழுஞ்சில் அம்கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண்,
கழைகாய்ந்து உலறிய வறம்கூர் நீள்இடை,
வரிமரல் திரங்கிய கானம் பிற்பட,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தென,
துவைத்து எழுகுருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங்குரல் அரிந்துகால் குவித்து,
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி,
எருதுகளிறு ஆக, வாள்மடல் ஓச்சி,
அதரி திரித்த ஆள்உகு கடாவின்,
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
வெந்திறல் வியன்களம் பொலிக! என்று ஏத்தி,
இருப்புமுகம் செறித்த ஏந்து மருப்பின்
வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும!
வடிநவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த
தொடிஉடைத் தடக்கை ஓச்சி, வெருவார்
இனத்தடி விராய வரிக்குடர் அடைச்சி,
அழுகுரற் பேய்மகள் அயர, கழுகொடு
செஞ்செவி எருவை திரிதரும்,
அஞ்சுவரு கிடக்கைய களம்கிழவோயே!
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மறக்களவழி)
 
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.