புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   987
Zoom In NormalZoom Out

371 அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது,
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி,
போதுஅவிழ் அலரி நாரின் தொடுத்து,
தயங்குஇரும் பித்தை பொலியச் சூடி,
பறையொடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
ஆடுறு குழிசி பாடுஇன்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப,
குறைசெயல் வேண்டா நசைய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆர்இடை நீந்தி,
கூர்வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப,
வருகணை வாளி....... அன்புஇன்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில்ஏர் உழவின்நின் நல்இசை உள்ளி,
குறைத்தலைப் படுபிணன் எதிர, போர்புஅழித்து,
யானை எருத்தின் வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள்உகு கடாவின்,
மதியத்து அன்னஎன் விசிஉறு தடாரி
அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணைமருள் நெடுந்தாள், பல் பிணர்த் தடக்கை,
புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும!
களிற்றுக் கோட்டன்ன வால்எயிறு அழுத்தி,
விழுக்கொடு விரைஇய வெண்நிணச் சுவையினள்,
குடர்த்தலை மாலை சூடி, 'உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
வயங்குபல் மீனினும் வாழியர், பல' என,
உருகெழு பேய்மகள் அயர,
குருதித்துகள் ஆடிய களம்கிழ வோயே!

திணையும் துறையும் அவை. (வாகை, மறக்களவழி) 

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக்
கல்லாடனார்பாடியது.
 

372 விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் - முழுத்த
இலங்குவாள் அவிர்ஒளி வலம்பட மின்னி,
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறை,
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்குல்,
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடம்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த,
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க' எனப்
புலவுக்