புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   988
Zoom In NormalZoom Out

372...
 
களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.
 
 
  திணை: வாகை; துறை: மறக்கள வேள்வி. அவனை மாங்குடி கிழார் பாடியது. (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை)
 
 
 
373
 
உருமிசை முழக்குஎன முரசம் இசைப்ப,
செருநவில வேழம் கொண்மூ ஆக,
தேர்மா அழிதுளி தலைஇ, நாம்உறக்
கணைக்காற்று எடுத்த கண்அகன் பாசறை,
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறுஉவப்ப,
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,
கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே!
................................................தண்ட மாப்பொறி
மடக்கண் மயில்இயல் மறலி யாங்கு
நெடுஞ்சுவர் நல்இல் புலம்ப, கடைகழிந்து,
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ
..........................அணியப் புரவி வாழ்கஎன,
சொல்நிழல் இன்மையின் நல்நிழல் சேர,
நுண்பூண் மார்பின் புன்தலைச் சிறாஅர்
அம்புஅழி பொழுதில் தமர்முகம் காணா,
........................................................ற் றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துஉகு பறந்தலை,
மாடம் மயங்குஎரி மண்டி, கோடுஇறுபு,
உரும்எறி மலையின், இருநிலம் சேர,
சென்றோன் மன்ற, சொெ
........................ ண்ணறிநர் கண்டுகண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக்களன் ஆக,
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்
கொண்டனை, பெரும! குடபுலத்து அதரி;
பொலிக அத்தை நின்பணை தனற............ளம்!
விளங்குதிணை வேந்தர் களற்தொறும் சென்று,
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்
அம்கண் மாக்கிணை அதிர ஒற்ற,
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,
நின்னோர் அன்னோர்