| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 989 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
373... | பிறர்இவண் இன்மையின், மன்எயில் முகவைக்கு வந்திசின், பெரும! பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் தாஇன்று உதவும் பண்பின், பேயொடு கணநரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ, அஞ்சுவரு கிடக்கைய களம்கிழவோயே! |
|
திணை அது; துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். (வாகை) சோழன் குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர் கிழார் பாடியது. | |
| | |
| 374 | கானல் மேய்ந்து வியன்புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன, பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத் தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர் மன்றப் பலவின் மால்வரை பொருந்தி, என் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, இருங்கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, கருங்கோற் குறிஞ்சி அடுக்கம்பாட, புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறாஅர் மான்கண் மகளிர், கான்தேர் அகன்றுஉவா சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை, விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம், புகர்முக வேழத்து மருப்பொடு, மூன்றும், இருங்கேழ் வயப்புலி வரிஅதட் குவைஇ, விருந்துஇறை நல்கும் நாடன், எம்கோன், கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல, வண்மையும் உடையையோ? - ஞாயிறு! - கொன்விளங் குதியால் விசும்பி னானே! |
|
திணை: பாடாண் திணை; துறை: பூவைநிலை. | |
|
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. | |
| | |
| 375 | அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி, நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற் பொதியில் ஒருசிறை பள்ளி ஆக, முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல் நாளும் போழும் கிணையொடு சுருக்கி, ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, ஊழ்இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் புரவு எதிர்ந்து |