புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   990
Zoom In NormalZoom Out

375...
 
கொள்ளும் சான்றோர்யார்? எனப்
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்,
வரைஅணி படப்பை, நல் நாட்டுப் பொருந!
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது,
பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன் மாரோ, புரவலர்! துன்னி,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடுஇன்று பெருகிய திருவின்,
பாடுஇல், மன்னரைப் பாடன்மார், எமரே!
 
 
  திணை: பாடாண் திணை; துறை: வாழ்த்தியல். அவனை அவர் பாடியது. (ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.)
 
 
 
376
 
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி பிறந்த பின்றை, செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தெடாரி தழீஇ,
பாணர் ஆரும் அளவை, யான்தன்
யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்;
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென,
குணக்குஎழு திங்கள் கனைஇருள் அகற்ற,
பண்டுஅறி வாரா உருவொடு, என் அரைத்
தொன்றுபடு துளையொடு பருஇழைபோகி,
நைந்துகரை பறைந்த என்உடையும், நோக்கி,
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவுவெகுண்டு அன்ன தேறலொடு, சூடுதருபு,
நிரயத்து அன்னஎன் வறன்களைந்து, அன்றே,
இரவி னானே, ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்புஅடு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி,
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி,
தோன்றல் செல்லாது, என் சிறு