| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 991 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
376... | கிணைக் குரலே. |
|
திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) | |
|
ஓய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. | |
| | |
| 377 | பனிபழுநிய பல்யாமத்துப் பாறுதலை மயிர் நனைய, இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின், இனையல் அகற்ற, என்கிணை தொடாக்குறுகி, 'அவி உணவினோர் புறங்காப்ப, அறநெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, அதற் கொண்டு வரல் ஏத்தி, '''கரவு இல்லாக் கவிவண் கையான், வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் பிறர்க்கு உவமம் தான்அல்லது, தனக்கு உவமம் பிறர்இல் என, அதுநினைந்து, மதிமழுகி, ஆங்குநின்ற எற்காணூஉச் 'சேய் நாட்டுச் செல்கிணைஞனை! நீ புரவலை, எமக்கு' என்ன, மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும், கடல்பயந்த கதிர்முத்தமும், வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, நனவின் நல்கியோன், நகைசால் தோன்றல்; நாடுஎன மொழிவோர், 'அவன்நாடு' என மொழிவோர்; வேந்துஎன மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; .........................பொற்கோட்டு யானையர், கவர்பரிக் கச்சை நல்மான், வடி மணி, வாங்கு உருள, .....................,..........நல்தேர்க் குழுவினர், கதழ்இசை வன் கணினர் வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, கடல்ஒலி கொண்ட தானை அடர்வெங் குரிசில்! மன்னிய நெடிதே! |
|
திணை: அது; துறை: வாழ்த்தியல். (பாடாண்திணை) | |
|
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியை உலோச்சனார்பாடியது. | |
| 378 | தென்பரதவர் மிடல்சாய, வடவடுகர் வாள்ஓட்டிய, தொடை அமை கண்ணி, திருந்துவேற் தடக்கை, கடுமா கடைஇய விடுபரி வடிம்பின், நல்தார், |