| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 992 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
378... | கள்ளின், சோழன் கோயில், புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து, பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்று, என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்குஎன வகுத்த அல்ல, மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல், விரற்செறி மரபின செவித்தொடக் குநரும், செவித் தொடர் மரபின விரற் செறிக் குநரும், அரைக்கு அமை மரபின மிடற்றுயாக் குநரும், மிடற்றுஅமை மரபின அரைக்குயாக் குநரும், கடுந்தெறல் இராம னுடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு, அறாஅ அருநகை இனிதுபெற்றிகுமே - இருங்கிளைத் தலைமை எய்தி, அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. |
|
திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) | |
|
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. | |
| | |
| 379 | யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை; அவனே பெறுகஎன் நாஇசை நுவறல்; நெல்அரி தொழுவர் கூர்வாள் மழுங்கின், பின்னை மறத்தொடு அரிய, கல்செத்து, அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் நெல்அமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லி யாதன் கிணையேம் பெரும! 'குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் அவ்விளர் நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா, வல்லன், எந்தை, பசிதீர்த்தல்' என, கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூற, கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது, விண்தோய் தலைய குன்றம் பின்பட, ......................................ர வந்தனென், யானே - |