| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 993 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
379... | தாய்இல் தூவாக் குழவிபோல, ஆங்குஅத் திருவுடைத் திருமனை, ஐது தோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்பு அடு குண்டுஅகழ் நீள்மதில் ஊரே. |
|
திணை அது; துறை: பரிசில் துறை. (பாடாண் திணை) | |
|
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. | |
| | |
| 380 | தென் பவ்வத்து முத்துப் பூண்டு, வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ, ........................................ங்கடற் தானை, இன்இசைய விறல்வென்றி, தென்னவர் வயமறவன் மிசைப்பெய்த நீர்கடல் பரந்து முத்துஆகுந்து, நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய, வேறுபெ......................................த்துந்து. தீம்சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; நட்பு எதிர்ந் தோர்க்கே அங்கை அண்மையன் வல்வேற் கந்தன் நல்இசை அல்ல, .....................த் தார்ப் பிள்ளை அம்சிறாஅர்; அன்னன் ஆகன்மாறே, இந்நிலம் இலம்படு காலை ஆயினும், புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே. |
|
திணை: அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) | |
|
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது. | |
| | |
| 381 | ஊனும் ஊணும் முனையின், இனிது என, பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், அளவுபு கலந்து, மெல்லிது பருகி, விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெம் ஆக, 'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என யாம்தன் அறியுந மாக, தான்பெரிது அன்புஉடை மையின், எம்பிரிவு அஞ்சி, துணரியது கொளாஅ வாகி, பழம்ஊழ்த்து, பயம்பகர்வு அறியா மயங்குஅரில் முதுபாழ், பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண், ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி, சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி, விரல்விசை தவிர்க்கும் அரலைஇல் பாணியின், இலம்பாடு அகற்றல் யா |