புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   994
Zoom In NormalZoom Out

381...
 
வது? புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இருநிலம் கூலம் பாற, கோடை
வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை,
சேயை ஆயினும், இவணை ஆயினும்,
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ!
சிறுநனி, ஒருவழிப் படர்கஎன் றோனே எந்தை,
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்புஇன்று,
இருங்கோள் ஈராப் பூட்கை,
கரும்ப னூரன் காதல் மகனே.
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண் திணை, இயன்மொழி)
 
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.
 
 
 
382
 
கடற்படை அடல்கொண்டி,
மண்டுற்ற மலிர்நோன்தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்குஉளை அணிஇவுளி
நலங்கிள்ளி நசைப்பொருநரேம்;
பிறர்ப்பாடிப் பெறல்வேண்டேம்;
அவற்பாடுதும், 'அவன்தாள் வாழிய!' என;
நெய்குய்ய ஊன்நவின்ற
பல்சோற்றான், இன் சுவைய -
நல்குரவின் பசித்துன்பின் நின்
முன்னாள் விட்டமூதுஅறி சிறாஅரும்
யானும், ஏழ்மணி, அம்கேழ், அணிஉத்தி,
கண்கேள்வி, கவைநாவின்,
நிறன்உற்ற, அராஅப் போலும்
வறன்ஒரீஇ - வழங்குவாய்ப்ப,
விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்!
நினதே, முந்நீர் உடுத்த இவ்வியன் உலகு, அறிய;
எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்அகத்து யாத்த நுண்அரிச் சிறுகோல்
ஏறிதொறும் நுடங்கி யாங்குநின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவை யானே.
 
 
திணை அது; துறை: கடைநிலை. (பாடாண்திணை)
 
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.
 
 
 
383
 
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்று எழுந்து,
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி,
நெடுங்கடை நின்று, பகருபல வாழ்த்தி,
தன்புகழ் ஏத்தினென்ஆக ஊன்புலந்து,
அருங்கடி