| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 995 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
383... | வியல்நகர்க் குறுகல் வேண்டி, கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல் தேம்பாய் உள்ள தம்கமழ் மடர்உள, பாம்புஉரி அன்ன வடிவின, காம்பின் கழைபடு சொலியின் இழைஅணி வாரா, ஒண்பூங் கலிங்கம் உடீஇ, நுண்பூண் வசிந்து வாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்தி, கற்புடை மடந்தை தன்புறம் புல்ல, எற்பெயர்ந்த நோக்கி..................................... .................................................கல்கொண்டு, அழித்துப் பிறந்தனென் ஆகி, அவ்வழி, பிறர், பாடுபுகழ் பாடிப்படர்பு அறியேனே; குறுமுலைக்கு அலமரும் பால்ஆர் வெண்மறி, நரைமுக ஊகமொடு, உகளும், சென................ .......................கன்றுபல கெழீஇய கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன் என ஒருவனை உடையேன் மன்னே, யானே; அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) | |
|
...........................மாறோக்கத்து நப்பசலையார் அவியனைப் பாடியது. | |
| | |
| 384 | மென்பாலான் உடன்அணைஇ, வஞ்சிக்கோட்டு உறங்குநாரை அறைக்கரும்பின் பூஅருந்தும் வன்பாலான் கருங்கால் வரகின் ........................................................... அம்கண் குறுமுயல் வெருவ, அயல கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக்குந்து விழவு இன்றாயினும், உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து; ................................................கிணையேம், பெரும! நெல்என்னா, பொன் என்னா, கனற்றக்கொண்ட நறவு என்னா, .....................மனைஎன்னா, அவைபலவும் யான்தண்டவும், தான்தண்டான், நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை, மண்நாணப் புகழ்வேட்டு, நீர்நாண நெய்வழங்கி, புரந்தோன்; எந்தை; யாமலந் தொலை..... அன்னோனை உடையேம் என்ப....... வறட்கு யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும், தின்ற நண்பல் ஊன் தோண்டவும், வந்த வைகல் அல்லது, சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) | |
|
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. | |
| | |
| 385 | வெள்ளி தோன்ற, புள்ளுக்குரல் இயம்ப, புலரி விடியல் பகடுபல |