புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   996
Zoom In NormalZoom Out

385... வாழ்த்தி,
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன்கடை,
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி,
வறன்யான் நீங்கல் வேண்டி, என்அரை
நீல்நிறச் சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என்பசி களைந்தோனே;
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்,
நல்அரு வந்தை, வாழியர்! - புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! 

திணை: அது; துறை: வாழ்த்தியல். (பாடாண் திணை)

அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது. 

386 நெடுநீர நிறைகயத்துப்
படுமாரித் துளிபோல,
நெய்துள்ளிய வறைமுகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
ஊன்கொண்ட வெண்மண்டை
ஆன்பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்துஉண்ட வியர்ப்புஅல்லது,
செய்தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன், எந்தை, இசைதனது ஆக;
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப்பன் மலர்ப் பூத்த தும்பின;
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான்,
வில்இருந்த வெங்குறும் பின்று;
கடலே, கால்தந்த கலன் எண்ணுவோர்
கானற் புன்னைச் சினைநிலைக் குந்து;
கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங்கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து;
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே;
பொராஅப் பொருநரேம்;
குணதிசை நின்று குடமுதல் செலினும்,
குடதிசை நின்று குணமுதல் செலினும்,
வடதிசை நின்று தென்வயின் செலினும்,
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளி; யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள்வாழி யவே  

திணையும் துறையும் அவை. (பாடாண் திணை, வாழ்த்தியல்) 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. 

387 வள்உகிர வயல்ஆமை
வெள்அகடு கண்டன்ன,
வீங்குவிசிப் புதுப்போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி, 'என்றும்
மாறுகொண்டோர் மதில்இடறி,
நீறு ஆடிய நறுங்கவுள,