| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 997 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
387... | பூம் பொறிப் பணை எருத்தின, வேறுவேறு பரந்து இயங்கி, வேந்துடைமிளை அயல்பரக்கும் ஏந்துகோட்டு இரும்பிணர்த் தடக்கை, திருந்துதொழில் பலபகடு பகைப்புல மன்னர் பணிதிறை தந்து, நின் நகைப்புல வாணர் நல்குரவு அகற்றி, மிகப் பொலியர், தன்சேவடி அத்தை!' என்று யான் இசைப்பின், நனி நன்று எனா, பலபிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... மருவ இன்நகர் அகன்................................. திருந்து கழற்சேவடி குறுகல் வேண்டி, வென்று இரங்கும் விறல் முரசினோன் என்சிறுமையின், இழித்து நோக்கான், தன் பெருமையின் தகவு நோக்கி, குன்று உறழ்ந்த களிறு என்கோ? கொய் உளைய மாஎன்கோ? மன்று நிறையும் நிரை என்கோ? மனைக் களமரொடு களம் என்கோ? ஆங்குஅவை, கனவுஎன மருள, வல்லே, நனவின் நல்கியோனே, நகைசால் தோன்றல், ஊழி வாழி, பூழியர் பெருமகன்! பிணர்மருப்பு யானைச் செருமிகு நோன்தாட் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் விடுவர் மாதோ நெடிதே நி . . . . . . . . . புல்இலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் பல்ஊர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, வாழ்த்தியல்) | |
|
சேரமான் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது. | |
| | |
| 388 | வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல், பள்ளம் வாடிய பயன்இல் காலை, இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர் ................................................................................பொருந்தி, தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை இடுக்கண் இரியல் போக, உடைய கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல், ................................................................னா மருப்பாக, வெல்லும் வாய்மொழிப் புல்லுடைவி . . . . . . . பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, வினைப்பகடு ஏற்ற மேழி |