புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   998
Zoom In NormalZoom Out

388...
 
கிணைத் தொடா,
நாள்தோறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி
கண்மாறிலியர்என் பெருங்கிளைப் புரவே!
 
 
திணை: அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
 
 
 
389
 
'நீர் நுங்கின் கண்வலிப்ப,
கானவேம்பின் காய்திரங்க,
கயம் கனியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போருறு காலை,
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!'
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன்தலை மடப்பிடி இனைய, கன்றுதந்து,
குன்றக நல்ஊர் மன்றத்துப் பிணிக்கும்
கல்இழி அருவி வேங்கடம் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல்ஏர் முதியன்!
ஆத னுங் கண் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும!
ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே!
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
 
 
 
390
 
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து ஆயி வாளர்,
அரும்பு அலர் செருந்தி நெடுங்கால் மலர்கமழ்
.........................................................மன்ன முற்றத்து,
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல்நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல்நாள் அன்றியும்,
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இராவின்
வந்ததற் கொண்டு, 'நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான்' என,
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின்