புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   999
Zoom In NormalZoom Out

390...
 
மட்டே அன்றியும்,
அமிழ்துஅன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி,
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற,
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி,
'கொண்டி பெறுக!' என்றோனே உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடிவாழ்த்தி
.....................................................
வான் அறி யலஎன் பாடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியல்? காண்புஅறி யலரே!
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 
 
 
391
 
தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்தி, பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி,
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்புஇல முதுகுடி
நன...............................................வினவலின்
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன்இவன்' என,
நின் உணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூற,
காண்கு வந்திசின், பெரும!...........................
..........பெருங்கழி நுழைமீன் அருந்தும்
துதைந்த தூவிஅம் புதாஅம் சேக்கும்
ததைந்த புனல்நின் செழுநகர் வரைப்பின்,
நெஞ்சு அமர் காதல் நின்வெய் யோளொடு
இன் துயி........................... ஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைகநின் வயலே!
 
 
திணை: அது; துறை: கடைநிலை. (பாடாண் திணை)
 
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
 
 
 
392
 
மதிஏர் வெண்குடை அதியர் கோமான்,
கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று,