புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1000
Zoom In NormalZoom Out

392...
 
யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி அன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ,
'உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்றுயான் நின்றனென் ஆக, அன்றே,
ஊர்உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும், கோள்முறை
விருந்துஇறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, கடைநிலை)
 
  அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டு எழினியை ஒளவையார்பாடியது.
 
 
 
393
 
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடு கூமை வீதலின்,
குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடன்அறி யாளர் பிறநாட்டு இன்மையின்,
'வள்ளன் மையின்எம் வரைவோர் யார்? என,
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா,
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென,
மலர்தார் அண்ணல் நின்நல்இசை உள்ளி,
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப,
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் மிடைநிறைந்து அன்ன,
வெண்நிண மூரி அருள, நான்உற
ஈன்ற அரவின் நாஉருக் கடுக்கும் என்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி,
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,
அகன்றுமடி கலிங்கம் உடீஇ, செல்வமும்,
கேடுஇன்று