| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 1001 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
393... | நல்குமதி, பெரும! மாசுஇல் மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, 'கோடை ஆயினும், கோடி............................... காவிரி புரக்கும் நல்நாட்டுப் பொருந! வாய்வாள் வளவன்! வாழ்க!, எனப் பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, கடைநிலை) | |
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார்பாடியது. | |
| | |
| 394 | சிலைஉலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின், ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், வலி துஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன், வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்! யானும் இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக, அகம்மலி உவகையொடு அணுகல் வேண்டி, கொன்று சினம் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன்; அஞ்சி யான் அது பெயர்த்தனென் ஆக, தான் அது சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும், 'துன்அரும் பரிசில் தரும்' என, என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, கடைநிலை) | |
| சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. | |
| | |
| 395 | மென்புலத்து வயல்உழவர் வன்புலத்துப் பகடுவிட்டு, குறுமுயலின் குழைச் சூட்டொடு நெடுவாளைப் பல் உவியல், பழஞ்சோற்றுப் புகவு அருந்தி, புதல் தளவின் பூச்சூடி, ................................................................ ...........................அரியலாருந்து; மனைக்கோழிப் பைம்பயிரின்னே, கானக்கோழி கவர்குரலொடு நீர்க்கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; வேய் அன்ன மென்தோளால், மயில் அன்ன மென் சாயலார், |