| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 1002 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
395... | கிளிகடி யின்னே, அகல் அள்ளல், புள்இரீஇயுந்து; ஆங்கு அப்பலநல்ல புலன் அணியும் சீர்சான்ற விழுச்சிறப்பின் சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் செல்லா நல்இசை உறந்தைக் குணாது, நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! முன்நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, கதிர்நனி செ ...................................... மாலை, தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், தீம்குரல்......... கின் அரிக்குரல் தடாரியொடு, ஆங்குநின்ற எற்கண்டு, சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், அருங்கலம் வரவே அருளினன் வேண்டி, ...........யென உரைத்தன்றி நல்கி, தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, 'இவனை என்போல் போற்று என்றோனே; அதற்கொண்டு அவன் மறவ லேனே; பிறர் உள்ள லேனே; அகன் ஞாலம் பெரிது வெம்பினும், மிகவானுள் எரிதோன்றினும், குளமீனொடும் தாள் புகையினும், பெருஞ்செய் நெல்லின் கொக்கு உதிர் நிமிரல் பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி, 'விளைவு ஒன்றோவெள்ளம் கொள்க!' என, உள்ளதும் இல்லதும் அறியாது, ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன்தாளே! |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, கடைநிலை) | |
|
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை
நக்கீரர் பாடியது. | |
| | |
| 396 | கீழ்நீரான் மீன் வழங்குந்து; மீ நீரான், கண்அன்ன, மலர்பூக்குந்து; கழி சுற்றிய விளைகழனி, அரிப்பறையான் புள் ஓப்புந்து; நெடுநீர் கூஉம் மணல்தண்கான் மென்பறையான் புள் இரியுந்து; நனைக்கள்ளின் மனைக்கோசர் தீம்தேறல் நறவுமகிழ்ந்து, தீம்குரவைக் கொளைத் தாங்குந்து; உள் இலோர்க்கு வலிஆகுவன், கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், கழுமிய வென்வேல் வேளே, வளநீர் வாட்டாற்று எழினி யாதன்; |