புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1003
Zoom In NormalZoom Out

396...
 
கிணையேம், பெரும!
கொழுந்தடிய சூடு என்கோ?
வளநனையின் மட்டு என்கோ?
குறுமுயலின் நிணம் பெய் தந்த
நறு நெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்த கூட்டுமுதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ
அன்னவை பலபல
...................................................ருந்தய
இரும்பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை;
எம்மோர் ஆக்கக் கங்குண்டே;
மாரி வானத்து மீன்நாப்பண்,
விரிகதிர வெண்திங்களின்
விளங்கித் தோன்றுகஅவன் கலங்கா நல்இசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி,
உரைசெலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே.
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, கடைநிலை)
 
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
 
 
 
397
 
வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;
பொய்கையும் போதுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப்புறங் கண்ட காலைத் தோன்றி,
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! பலகோள்
செய்தார் மார்ப! எழுமதி துயில் என,
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,
மணிக்கலன் நிறைந்த மணம் நாறு தேறல்,
பாம்புஉரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு,
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என்வெப்பு நீங்க,
அருங்கலம் நல்கி யோனே; என்றும்,
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை,
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள்
வலம்படு தீவின் பொலம்பூண் வளவன்;
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக் கண் செலினும்,