| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 1004 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
397... | தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும், 'என்?' என்று அஞ்சலம், யாருமே; வென்வேல் அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன் திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே. |
|
திணை: அது; துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம்.(பாடாண்திணை) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது. | |
| | |
| 398 | மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, வகைமான் நல்இல்........................ பொறிமயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, பொய்கைப் பூமுகை மலர, பாணர் கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, பரிசிலர் விசையெ . . . . . . வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் புலியினம் மடிந்த கல்அளை போல, துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர், மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! 'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு', - என என்வரவு அறீஇ, சிறிதிற்குப் பெரிது உவந்து, விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் புகைவிரிந்து அன்ன பொங்குதுகில் உடீஇ, அழல்கான்று அன்ன அரும்பெறல் மண்டை, நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யாண்உண அருளல் அன்றியும், தான்உண் மன்டைய கண்ட மான்வறைக் கருனை, கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும், விரவுமணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, புரையோன் மேனிப் புத்தசல....................... முரை |