புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1006
Zoom In NormalZoom Out

  பரிசில் விடை. (பாடாண்திணை)
 
தாமான் தோன்றிக் கோனை ஐயூர்முடவனார் பாடியது.
 
 
 
400
 
மாகவிசும்பின் வெண்திங்கள்
மூ - ஐந்தான் முறைமுற்ற,
கடல்நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்தி,
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர்துஞ்சவும் தான்துஞ்சான்,
உலகு காக்கும் உயர்ெ..........க்
கேட்டோன், எந்தை, என்தெண் கிணைக்குரலே;
கேட்டதற் கொண்டும், வேட்கை தண்டாது,
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி,
மிகப்பெருஞ் சிறப்பின் வீறு.......
...........................................................லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,
நார்அரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;
போது அறியேன், பதிப்பழகவும்,
தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்த த.............................................
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங்கழி இழிதரு........ கலி வங்கம்
தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்து,
துறைதொறும் பிணிக்கும் நல்ஊர்,
உறைவு இன்யாணர்........ கிழவோனே.
 
 
திணை: அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.