திருக்குறள்
ஓலை எண் :   26

Zoom In NormalZoom Out

க்கப்படாத   நற்குணங்களை   உடைய   புதல்வரைப்    பெறுவான்
ஆயின்.  ''அவன்  தீவினை  வளராது  தேய்தற்குக் காரணம் ஆகிய
நல்வினைகளைச்    செய்யும்   புதல்வரைப்   பெறுவான்   ஆயின்''
என்றவாறு   ஆயிற்று.   பிறப்பு  ஏழாவன:  ''ஊர்வ  பதினொன்றாம்
ஒன்பது   மானிடம்   நீர்பறவை   நாற்கால்  ஓர்  பப்பத்துச்  சீரிய,
பந்தம்ஆம்  தேவர்  பதினான்கு  அயன்படைத்த  அந்தம்  இல்சீர்த்
தாவரம் நாலைந்து'' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை
நோக்கிப்  புதல்வர்  செய்யும்  தான  தருமங்கட்கு  அவர் நற்குணம்
காரணமாகலின்,  ''பண்பு''  என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல்
நின்றது.   தம்பொருள்  என்பதம்  மக்கள்;  அவர்பொருள்  தம்தம்
வினையான் வரும். தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர்
அறிந்தோர்;  அப்புதல்வர்  செய்த  பொருள்  தம்மை நோக்கி அவர்
செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ''தம்தம் வினை''
என்புழித்    தொக்கு   நின்ற   ஆறாம்   வேற்றுமை,   ''முருகனது
குறிஞ்சிநிலம்''   என்புழிப்  போல  உரிமைப்  பொருட்கண்  வந்தது.
பொருள்  செய்த  மக்களைப்  ''பொருள்''  என  உபசரித்தார். இவை
இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன்
கூறப்பட்டது.   அமிழ்தினும்   ஆற்ற  இனிதேதம்  மக்கள்  சிறுகை
அளாவிய  கூழ்.  சுவையான  அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து;
தம்   மக்களது   சிறுகையான்  அளாவப்பட்ட  சோறு.  சிறுகையான்
அளாவலாவது,  ''இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை
அடிசில்   மெய்பட   விதிர்த்தல்.  புறநா.188  மக்கள்மெய்  தீண்டல்
உடற்கின்பம்  மற்றவர்  சொல்கேட்டல்  இன்பம்  செவிக்கு. ஒருவன்
மெய்க்கு  இன்பமாவது  மக்களது  மெய்யைத்  தீண்டுதல்;  செவிக்கு
இன்பமாவது  அவரது  சொல்லைக்  கேட்டல்.  ''மற்று'' வினைமாற்று.
மக்கள் மழலைச் சொல்லே அன்றி அவர்